இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் மதுரை ராக்ஸ்' மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம்
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் மதுரை ராக்ஸ்' மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்திஷ்,IPS., அவர்கள் துவக்கி வைத்து தாமும் முழுபரிசோதனை செய்து கொண்டார்கள். இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு இதில் இரத்த அழுத்தம், இரத்த வகை ECG, நுரையீரல் செயல்பாடு பரிசோதனை, சக்கரை அளவு, கண் பரிசோதனை, செய்து உணவு முறை ஆலோசனை, போன்ற பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. S.முருகராஜ், ஆய்வாளர் அ.தங்கமணி மற்றும் மதுரை ராக்ஸ் மருத்துவமனை மருத்துவர் திரு. ஆகாஷ், நிர்வாக அலுவலர் திரு. மு. சரவணமுத்து மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment