பரமக்குடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ரூபாய். 52.92.200 லட்சம் ஹவாலா பணம் பிடிபட்டது. - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, July 13, 2024

பரமக்குடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ரூபாய். 52.92.200 லட்சம் ஹவாலா பணம் பிடிபட்டது.


 பரமக்குடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில்  ஈடுபட்டபோது ரூபாய். 52.92.200  லட்சம் ஹவாலா பணம்  பிடிபட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் மதுவிலக்கு காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் மதுவிலக்கு சம்பந்தமாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று (13.07.2024) காலை பரமக்குடி உட்கோட்டம், எமனேஸ்வரம் காவல் நிலைய சரகம், காந்திநகர் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, அருணையூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், த/பெ.தங்கவேல் என்பவர் (TN 07 AS 7954 Passion Pro) மற்றும் கவிதாஸ், த/பெ.மலைச்சாமி, N.வளையனேந்தல் (TN 65 BX 2167 Hero)   ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மேற்படி சோதனை சாவடியில் வைத்து சோதனை செய்த போது அவர்களிடமிருந்த ஒரு பேக் மற்றும் கட்டப்பையில்  ரூ.52,92,200/- பணம் இருந்தது தெரியவந்தது. மேற்படி பணத்திற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், மேற்படி பணம் தொடர்பாக இளையான்குடி புதூரைச் சேர்ந்த பன்னீர், த/பெ.பாண்டி என்பவரும் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டுள்ளார். மேற்படி நபர்கள் விசாரணைக்கு பின்னர் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். மேற்படி வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் அழைத்து பணவெகுமதி அளித்து வெகுவாக பாராட்டினார்,

No comments:

Post a Comment

Post Top Ad