5 நாட்கள் ஆகியும் சரி செய்யப்படாமல் "காவேரிகூட்டுநீர் குழாய்" உடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருகி ஓடி வீணாக போகின்றது.
இராமநாதபுரம் இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள . உச்சிப்புளி மெயின் ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் எதிரில் கடந்த ஐந்து நாளாக காவேரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் அதிலிருந்து வெளியாகும் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாக போகிறது. இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் நிர்வாகம்.
மண்டபம் ஒன்றியம் என் மனம் கொண்டான் ஊராட்சி உச்சிப்புளி, இந்த வழியாக தான் மண்டபம் பாம்பன் தங்கச்சிமடம் இராமேசுவரம் போன்ற ஊர்களுக்கு குழாய்களின் மூலமாக மக்களின் தேவைக்காக காவேரி கூட்டு குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஊராட்சி அலுவலகம் பள்ளிக்கூடம் போன்றவை அமைந்துள்ளது அனைவருக்கும் பயன்படக் கூடிய தண்ணீர் குழாயை சம்பந்தப்பட்ட காவேரி கூட்டு குடிநீர் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் கவனித்து குழாயில் ஏற்ப்பட்ட பழுதுவை விரைந்து சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment