இராமநாதபுரம் ஜம்பு தீபகற்ப பிரகடனம் செய்த முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டிய சகோதரர்களுக்கு இராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையில் அகமுடையார், சமுதாய கூட்டமைபின் உரிமை மீட்பு விழா - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, June 30, 2024

இராமநாதபுரம் ஜம்பு தீபகற்ப பிரகடனம் செய்த முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டிய சகோதரர்களுக்கு இராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையில் அகமுடையார், சமுதாய கூட்டமைபின் உரிமை மீட்பு விழா


இராமநாதபுரம் ஜம்பு தீபகற்ப  பிரகடனம் செய்த முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டிய சகோதரர்களுக்கு இராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையில் அகமுடையார், சமுதாய கூட்டமைபின் உரிமை மீட்பு விழா நடைபெற்றது


இதில் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக 224 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 1801 ஆம் ஆண்டு தென்னிந்திய நாடுகளின் கூட்டணியை உருவாக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலந்தீவு பிரகடனம் எனும் ஜம்பு தீபகற்ப, பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்ட நாள் 


திருச்சி மலைக்கோட்டையிலும், ஸ்ரீரங்கம் கோவிலிலும் நாவலந்தீவு பிரகடனம் என்ற ஜம்பு தீபகற்ப பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்டனர் 


இதுதான் இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் வெளியிடப்பட்ட முதலாவது சுதந்திரப் போருக்கான பிரகடனம். 


இந்த நாளை அனைத்து  பல்கலைக்கழகங்கள் கொண்டாட வேண்டும் எஎ சுற்றுஅறிக்கை அனுப்பிய தமிழகத்தின் கவர்னர் அவர்களுக்கும் மருதுபாண்டியர்களுக்கு சிவகங்கையில் சிலை வைக்க சட்டபேரவையில் அறிவித்த. தமிழக முதல்வர் அவர்களுக்கும்.  விழாவில் நன்றி, தெரிவிக்கபட்டது.


அகமுடையார் சமுதாயத்தை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க கோரியும் ஜம்பு தீபகற்ப பிரகடனம் நினைவு சின்னம் திருச்சியில் அமைக்கவேண்டும் எனவும் தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலே  இட ஒதுக்கீடு, வழங்கவும். தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.


முன்னதாக வாலாந்தரவையில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்பப்பட்டது இதில் இராமநாதபுரம்  மாவட்ட தலைவர் பாம்பன் ராஜாஜி அவர்கள்  தலைமை வகித்தார் மாவட்ட கௌரவத்தலைவர் வைகிங் M,S.கருணாநிதி அவர்கள் முன்னிலை வகித்தார்


மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்  திருப்பத்தூர் திரு.இராமசாமி அகமுடையார்  அவர்கள் சிறப்பு விருந்தினராக  பங்கேற்றார்


வீரத்தமிழர் முன்னேற்ற கழகம் நிறுவனர் மதுரை சூரிய மணிகண்டன் வழக்கறிஞர், அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் பழனி பாலமுருகன்  மதுரை ராம்சுந்தர் கல்வி அறக்கட்டளை மதுரை வெங்கடேஷ் வாலாந்தரவை முஸ்லீம் ஜமாத் தலைவர் ருக்குனுதீன் அவர்கள் ஜமாத்தார்கள் (மத நல்லிணக்க அடிப்படையில் கலந்து கொண்டார்கள்) அனைத்து அரசியல் கட்சியின் அகமுடையார் சமுதாய பிரதிநிதிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர் விழா ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் சங்க நிர்வாகிகள்  செய்திருந்தனர்.


செந்திகள் வே.செந்தில்குமார் மாவட்ட செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad