ஊரணியில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது நோய்கள் பரவும் அபாயம் - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, June 13, 2024

ஊரணியில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது நோய்கள் பரவும் அபாயம்


ஊரணியில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது நோய்கள் பரவும் அபாயம்


இராமநாதபுரம்  சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் பாரதிநகர் சோத்தூரணி உள்ளது இந்த  குளத்தில் கழிவு நீர் கலப்பதாலும் குப்பை தேங்கி இருப்பதாலும்   துர்நாற்றம் வீசுகிறது 


இராமநாதபுரம் இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகர் தென்புறத்தில் அமைந்துள்ளது  சோத்தூரணி இந்த குளம் ஒரு காலகட்டத்தில் குடிநீர்க்காக பயன்படுத்திவந்தனர் 


பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இந்த பகுதியில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள் ஹோட்டல்  மருத்துவமனை பேக்கரி போன்ற இடங்களில் இருந்து கழிவு நீர் கலந்து வருவதால்  தற்போது துர்நாற்றம் வீசுகிறது   


சக்கரக்கோட்டை ஊராட்சி பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு வெட்டபட்ட கருவேல மரங்களை  ஊராணிக்குள் போட்டு உள்ளனர் இந்த பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளால் மேலும் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக கருதுகின்றனர்  


இப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள்  மாவட்ட நிர்வாக மற்றும் சுகாதார அலுவலர்கள் கவனத்தில் கொண்டு உடனடியாக கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தி ஊரணியை சுற்றியுள்ள கருவேல மரங்கள் குப்பையை  அகற்றி  மராமத்து செய்து முறையாக பராமரிக்க   கோரிக்கை வைக்கின்றர்


இப்பகுதிகளில் வார சந்தை நடைபெறுகிறது கழிப்பிட வசதிகள் இல்லாமல் மிகவும் சிரம படுகின்றனர்  தற்போது இந்த இடம் திறந்த வெளி கழிப்பிடமாகவும் இரவு நேர பார் ஆகவும்  பயன்படுத்த படுகிறது 


பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கழிப்பிட வசதிகள் செய்துதர வேண்டும் என  கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad