இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பாம்பன் ஊராட்சியில், சிம்லா ஊரணி மற்றும் சிதம்பரம் ஊரணியில் கரை பலப்படுத்தி சுற்றுச்சுவர் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. தங்கச்சிமடத்தில் ரூபாய் 4.22 கோடி மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும்,மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப.,அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார், தொடர்ந்து இராமேஸ்வரத்தில் green Rameswaram திட்டத்தின் கீழ் பீமா திட்டம் மற்றும் அர்ச்சுணா திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்து அதிகளவு மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்திட நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து தொடர்புடைய அலுவலர்கள் திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார், இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர்(பயிற்சி ) திரு.முகம்மது இர்பான்,இ.ஆ.ப., அவர்கள், பொதுபணித்துறை செயற்பொறியாளர் திரு.குருதிவேல்மாறன் அவர்கள், பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.அகிலா பேட்ரிக் அவர்கள், தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.குயின்மேரி அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment