இராமநாதபுரம் மீனவ இளைஞர்கள் பங்கு பெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
கமுதி கோட்டைமேடு தனி ஆயுதப்படை பயிற்சி மையத்தில் இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை சேர்ந்த 40 மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கடந்த 90 நாட்களாக நடைபெற்றது.பயிற்சி முடித்த மீனவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட மீன் வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி தலைமை வகித்தார். கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் கனகராஜ், கமுதி டி.எஸ்.பி., இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். பயிற்சி மையத்தில் நிறைவு பெற்ற 40 மீனவ இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார். இதில் கடலோர காவல்படை போலீசார், அதிகாரிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment