கமுதி பசும்பொன், உ.முத்துராமலிங்கத்தேவர் திருமகனார், அவர்களின் 117 வது பிறந்ததினம் மற்றும் குருபூஜை விழா அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர்தூவி,மரியாதை செலுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (30.10.2024) இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 117வது பிறந்ததினம் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
இந்திய விடுதலை பெருவதற்க்காக தன்னையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் இன்றைய தினம் நான் மரியாதை செலுத்தி இருக்கின்றேன். இந்த நேரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் தேவர் திருமகனார் அவர்களைப் பற்றி பெருமைப்படுத்தி குறிப்பிட்டுச் சொன்னதை நான் சொல்ல விரும்புகிறேன்.
அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் போன்று.கம்பீரமாக காட்சி அளித்தார் தேவர் திருமகன்" -என்று பேரறிஞர் அண்ணா அவரைப் பாராட்டியிருக்கிறார்.
வீரராக பிறந்தார் வீரராக வாழ்ந்தார், வீரராக மறைந்தார், மறைவுக்கு பிறகும் வீரராக போற்றப்படுகிறார், என்று தலைவர் கலைஞர் அவர்கள் அவரைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார் அத்தகைய தியாகியை போற்றும் அரசாக, திராவிட முன்னேறக் கழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். பசும்பொன்தேவர் அவர்களை போற்றி கழக அரசு செய்திருக்கக்கூடிய பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றை நான் உங்கள் இடத்தில் குறிப்பிட்டு காட்டினார், மதுரை கோரிப்பாளையத்தில் வெங்கலசிலையும் ஆண்டாள்புரம் பாலத்திற்கு தேவர் பெயர் சூட்டப்பட்டதையும் பசும்பொன்னில் நினைவகம் மேல்நீலிதநல்லூர் கமுதி உசிலம்பட்டி ஆகிய இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர் மரபினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு ஒதுக்கீடு இப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின், 117வது, பிறந்தநாளை முன்னிட்டு குருபூஜை நடத்தி இருக்கிறோம். நேற்றைய முன்தினம் 1 கோடியே 55 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட தெய்வீக திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை திறந்து வைத்திருக்கின்றோம்.
இதுபோன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரைப் போற்றும் செயல்களையும் திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம் எனவே அவரது புகழ் வாழ்க.வாழ்க என்று குறிப்பிட்டு கூறிக்கொள்கிறேன்.
தொடர்ந்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,மாண்புமிகு நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு,கூட்டுறவு த்துறை அமைச்சர், தி.கே.ஆர். பெரியகருப்பண், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன், மாண்புமிகு பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி,மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாராஜன்,மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம், திரு.செ.முருகேசன், திரு.இராம.கருமாணிக்கம் உள்ளிட்ட நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்தியநாதன் இ.ஆ.ப., இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., திரு. உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment