பக்தர்கள் வினோத நேர்த்தி கடன் - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, September 13, 2024

பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்

 


பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்


இராமநாதபுரம்  செப்.13- கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல், முளைப்பாரி விழா செப்.1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் சக்தி கரகம், அக்கினி சட்டி, பால்கு டம் எடுத்து வந்து பூக்குழி இறங்கினர். அழகுவள்ளி அம்மனுக்கு பால், சந்த னம் உட்பட 21 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.


பக்தர்கள் வினோதமான முறையில் சாக்கு வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.


முளைக்கொட்டு திண்ணையில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி துாக்கி ஊருணி (குளத்தில்)  கரைத்தனர். விழாவில் கமுதி, முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad