முன்னதாக மௌலவி ஏ. முஹம்மது சபீக் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். இஸ்லாமிய இலக்கியக் கழக அமைப்பாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் குத்புதீன் ஐபக் நூலை வெளியிட முதல் பிரதியை திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹெச். ஹசன் அஹமது பெற்றுக் கொண்டார்.
சென்னை உலக தமிழாராய்ச்சி சிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் முனைவர் ஜாஸ்மின், சேக்கிழா விருது பெற்ற எழுத்தாளர் டாக்டர் நீ.சு. பெருமாள், பட்டிமன்ற பேச்சாளர் ச. துரைப்பாண்டியன், தமிழக முதலமைச்சர் நூல் மொழிபெயர்ப்பு திட்ட மேற்பார்வையாளர் முனைவர் பாரதி நடராஜன், இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அப்பாஸ் அலி, இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் செய்யது ஹுசைன், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
அவர்கள் மறைக்கப்படும் இந்திய விடுதலை வீரரான திப்பு சுல்தான் குறித்த நூலை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டமைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
நூலாசிரியரும், சேதுபதி அரசவை கவிஞருமான ஜவ்வாது புலவரின் எட்டாம் தலைமுறை வாரிசான ஈரோடு கு. ஜமால் முஹம்மது ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தனது பாட்டனார் வாழ்ந்த மண்ணில் இந்த நூல் வெளியிடப்படுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
கவிஞர் இதயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கே.ஏ. சாதிக் நஸ்ரத் கான் நன்றியுரை நிகழ்த்தினார். விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment