ராஜ்ஜியத்தை ஆளும் மோடிக்கு, பூஜ்ஜியம் மார்க் தான் விழும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு. - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, April 12, 2024

ராஜ்ஜியத்தை ஆளும் மோடிக்கு, பூஜ்ஜியம் மார்க் தான் விழும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு.


இராமநாதபுரம் பாராளுமன்ற  தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ பரமக்குடியில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், இந்திய பிரதமர் தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். விவசாயிகள் டெல்லியில் மூன்று மாதம் உண்ணாவிரதம் இருந்தபோது வராத பிரதமர் இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறாரென்று தெரியவில்லை.  சரியான பதிலடியை, மரண அடியை இந்த தேர்தல் களத்தில் மக்கள் தருவார்கள். அதில், தமிழகம் முதல் இடத்தில் இருக்கும். 


தமிழக வரும் பிரதமருக்கு 25 ஆயிரம் போலீசார் வருகின்றனர். அவர் செல்லும் வழியில் எவ்வளவு மக்கள் நிற்கிறார்களோ, அந்த அளவுக்கு போலீசரும் நிற்கிறார்கள்.. பிரதமர் மோடி தமிழ்நாடு முழுவதும் சுத்தி வந்தாலும் பூஜ்ஜியத்தை தான் பெறப்போகிறீர்கள். உங்களுக்கு பூஜ்ஜியம் மார்க் தான் விழும் என பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad