இராமேஸ்வரம் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா, தனியார் பெண்கள் உடைமாற்றும் விடுதியின் உரிமம் ரத்து. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனியார் பெண்கள் , உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்த இருவரை இராமேசுவரம் போலீசார் கைது செய்தனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு தனியார் உடைமாற்றும் நிலைய உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 120 க்கும் மேற்பட்ட வீடியோக்களை கைப்பற்றி இந்த வீடியோக்கள் வெளி நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அக்னி தீர்த்தம் கடற்கரை அருகே உடைமாற்றும் அறையில் ரகசிய கேமராவை வைத்த புகாரில் தனியார் உடைமாற்றும் அறைக்கு உரிமம் ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர்த்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் நடவடிக்கை.
No comments:
Post a Comment